நம்பர் ஒன் நடிகையா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மணிரத்னத்தின் 'கடல்', கவுதம் வாசுதேவ் மேனனின், 'நீதானே என் பொன்வசந்தம்', 'நான் ஈ' படங்களில் நடித்து வரும் சமந்தா கூறியதாவது: சினிமாவுக்கு வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. இந்த வருடம் நான் நடித்து எட்டு படங்கள் வெளியாகின்றன. இதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளேன். அறிமுகமானபோது இவ்வளவு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கவில்லை. குறுகிய காலத்திலேயே பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தது எனது அதிர்ஷ்டம்தான். பெரும்பாலான நடிகைகளை நம்பர் ஒன் என்கிறார்கள். எத்தனை நம்பர் ஒன்கள் சினிமா துறையில் இருக்க முடியும்? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நம்பர்கள் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால் இதில் நம்பிக்கை இல்லை. அதிகமான படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். எத்தனை படங்கள், யார் ஹீரோ என்பதையெல்லாம் இப்போது சொல்ல இயலாது. அந்த படங்களின் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்.
'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நித்யா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த கேரக்டர் என் மனசுக்கு நெருக்கமானது. ஸ்கூல், கல்லூரி அதற்கு அடுத்த காலகட்டங்களில் நடக்கும் காதல் கதை இது. இந்தப் படத்தை பார்த்த பிறகு எல்லோருமே தங்கள் வாழ்க்கையை அந்த கேரக்டரோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதே போல 'நான் ஈ' படத்திலும் என் கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு சமந்தா கூறினார்.


 

Post a Comment