இந்தியில் தயாராகும் பிதாமகன் - சல்மான்கான் ஹீரோ!

|

Salman Khan Play Pithamagan S Hindi   
பாலா இயக்கத்தில் வெளியாகி, வெற்றியும் விருதுகளையும் குவித்த பிதாமகன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தப் படத்தில் விக்ரம் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். சூர்யாவின் வேடத்துக்குப் பொருத்தமான நடிகரை தேடி வருகிறார்கள்.

சதீஷ் கவுசிக் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பாலாவின் சேது படத்தை இந்தியில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 9 ஆண்டுகளுக்கு முன் வந்தது பிதாமகன் படம். தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. விக்ரம், சூர்யா இணைந்து நடித்தனர். விக்ரமுக்கு இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.

பிதாமகன் ரீமேக் குறித்து சதீஷ் கவுசிக் கூறுகையில், "பிதாமகன்' படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. இந்திக்கேற்ப லேசான மாறுதல்களுடன் இந்தக் கதையை எடுக்கிறேன்.

விக்ரம் கேரக்டருக்கு சல்மான்கான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளேன். சூர்யா வேடத்துக்கு சில நடிகர்களைப் பார்த்து வைத்திருக்கிறோம். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது," என்றார்.
Close
 
 

Post a Comment