குரு பாலசந்தர் வழியில் டிவிக்கு வந்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா!

|

Suresh Krishna Debuts Chinnathirai
பாலசந்தரின் பிரதம சிஷ்யரான சுரேஷ் கிருஷ்ணா ஆஹா என்ற நெடுந்தொடரின் மூலம் சின்னத்திரையில் கால் பதிக்கிறார். குரு பாலசந்தர் ரயில் சிநேகம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு முதன் முதலில் வந்தார். அவரது வழியில் இப்போது சுரேஷ் கிருஷ்ணாவும் வருகிறார். பாலச்சந்தர் சின்னத்திரையிலும் முத்திரை பதித்தவர். அவரைப் போலவே சின்னத்திரையில் சிஷ்யர் ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும் இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ‘ஆஹா’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான். புதுமுகங்கள் நடிக்கும் இத்தொடருக்கு, பா.விஜய்யின் பாடல் வரிகளுக்கு, ஜீ.வி.பிரகாஷ்குமாரின் அற்புதமான இசையில் டைட்டில் சாங் உருவாகி இருக்கிறது. விரைவில் இத்தொடர் விஜய் டி.வி.யில் ஒளிப்பரபாக இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆஹா என்ற படத்தை சுரேஷ் கிருஷ்ணாதான் இயக்கினார். இப்போது அதே தலைப்பை வைத்து ஆஹா என்ற ‌தொடரை இயக்குகிறார். தொடரின் தலைப்பு மட்டும் தான் படத்தின் தலைப்பு. மற்றபடி ஆஹா தொடரின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்குமாம். தொலைக்காட்சித் தொடர்களில் புதுமையை புகுத்தியவர் குரு பாலசந்தர் அவர் வழியில் சிஷ்யரும் ஜெயிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
 

Post a Comment