பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் ஒய்.ஜி. மகேந்திரன்

|

Yg Mahendra Pittsburgh Tamil Sangam Event   
பிட்ஸ்பர்க்: பிட்ஸ்ப்ர்க் தமிழ்ச் சங்கம் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 4ம் தேதி பிட்ஸ்பர்க்கில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் அரங்கில் நாடகம் நடந்தது.

பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க்கில் வாழும் தமிழ் மக்கள் இணைந்து பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கத்தை துவங்கியுள்ளனர். இந்த சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி அங்கீகாரம் பெற்றது. தமிழ் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் இச்சங்கம் துவங்கப்பட்டுள்ளது. சங்கம் துவங்கப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சியாக ஒய்.ஜி.மகேந்திரனின் நகைச்சுவை நாடகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வெங்கடா 3 என்று பெயரிடப்பட்ட அந்த நாடகம் வெங்கடேஸ்வரா கோவில் அரங்கில் கடந்த 4ம் தேதி நடந்தது. ஒய்.ஜி. மகேந்திரன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அரங்கம் நிரம்பி வழிந்தது. நாடகத்தைப் பார்த்த மக்கள் குலுங்கி, குலுங்கி சிரித்ததில் அரங்கமே அதிர்ந்தது. சிகாகோவைச் சேர்ந்த திரிவேணி ஆர்ட்ஸ் அகாடமியினர் பிற கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் நடித்தார்.

நாடகம் பார்க்க வந்தவர்களுக்கு சிறப்பான உபசரி்ப்பு செய்யப்பட்டது. இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர். மேலும் மூத்த தமிழ் மக்கள் சிலர் சங்கத்தை வாழ்த்திப் பேசினர். நாடகத்தில் நடித்தவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இளம் தமிழர்கள் பாராட்டப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் நார்த் பார்க்கிற்கு சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
Close
 
 

Post a Comment