நிதி நிறுவன அதிபர் மீது 'பசங்க' பாண்டிராஜ் கமிஷனரிடம் புகார்

|

Pandiraj Gives Complaint Against Financier
பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் திருச்சியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மீது சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

பசங்க படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் பாண்டிராஜ். அவரது மெரினா படம் அண்மையில் தான் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் அவர் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

திருச்சியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பாலகிருஷ்ணன் என்னை புதிய படம் எடுக்கவிடாமல் இடையூறு செய்து வருகிறார். மேலும் என்னை மிரட்டியும் வருகிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

பாண்டிராஜ் மீது பாலமுருகன் ஏற்கனவே பணமோசடி புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

Post a Comment