பிரசன்னா , சினேகா தம்பதி கரூர் கோயிலில் நேர்த்தி கடன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை சினேகா , பிரசன்னா ஜோடி கரூர் தாந்தோணிமலை கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. பிரசன்னாவுக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் பொய்யாமணி. இவரது தாய் கரூர் மகாதானபுரத்தை சேர்ந்தவர். கரூர் தாந்தோணிமலையில் பிரசன்னாவின் உறவினர் வீடு உள்ளது. நேற்று பிற்பகல் பிரசன்னா , சினேகா தம்பதியினர் தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு வந்தனர். அவர்களை அர்ச்சகர் கிருஷ்ணன், ரேவதி மற்றும் நண்பர்கள் வரவேற்றனர். பின்னர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். சிறிது நேரத்தில் இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர்.

பிரசன்னா, சினேகா வந்திருப்பது அப்பகுதியினருக்கு தெரிய வந்ததால், அவர்கள் இருந்த வீட்டுக்குமுன்பு நு£ற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக இருவரும் காரில் ஏறி சென்று விட்டனர். பிரசன்னாவின் உறவினர்கள் கூறும்போது, திருமணம் முடிந்ததும் தம்பதியாக வந்து சாமி கும்பிடுவதாக பிரசன்னா வேண்டியிருந்தார். அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வந்தனர் என்று தெரிவித்தனர்.


 

Post a Comment