சிறந்த நடிகர் விஷால் - சிறந்த நடிகை ரிச்சா: நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு

|

Norway Tamil Film Festival Awards 2012 Aid0136   | ரிச்சா  
ஆஸ்லோ: தமிழ் சினிமாவுக்காக உலக அளவில் நடத்தப்படும் நார்வே தமிழ் திரைப்பட விழா 2012-ல் சற்குணம் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் குழு விருது அவன் இவன் படத்துக்காக நடிகர் விஷாலுக்கும், சிறந்த நடிகர் விருது போராளி படத்தில் நடித்த எம் சசிகுமாருக்கும், சிறந்த நடிகை விருது மயக்கம் என்ன படத்துக்காக ரிச்சா கங்கோபாத்யாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இசை அமைப்பாளர் விருது அழகர்சாமியின் குதிரை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. அருகாமை நகரமான லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள் திரையிடப்பட்டன.

நேற்று முன்தினம் குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வண்ணமயமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் திரையுலகிலிருந்து இயக்குநர் சற்குணம், நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தூங்கா நகரம் இயக்குநர் கவுரவ், ஆவணப்பட இயக்குநர் சுபாஷ் கலியன் , பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, தயாரிப்பாளர் கேசவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே), பிரவீனா(நோர்வே), மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகியோருடன் 'Yarl stars' இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" இசை நிகழ்ச்சி நடந்தது.

அரங்கம் நிறைந்து, நிறைய ரசிகர்கள் இடமின்றி திரும்பும் அளவுக்கு கூட்டம் கூடியது நேற்று.

ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில், தமிழ் சினிமாவுக்கான விருதுகளே அறிவிக்கப்பட்டன.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்பட ஏழு விருதுகள் கிடைத்தன வாகை சூட வா படத்துக்கு. அழகர் சாமியின் குதிரை நான்கு விருதுகளைத் தட்டிச் சென்றது.

விருதுகள் விவரம்:

சிறந்த படம் - வாகை சூட வா

சிறந்த இயக்குநர் - சற்குணம் (வாகை சூட வா)

சிறந்த நடிகர் - ஸ்பெஷல் ஜூரி விருது - நடிகர் விஷால் (அவன் இவன்)

சிறந்த நடிகர் - எம் சசிகுமார் (போராளி)

சிறந்த நடிகை - ரிச்சா கங்கோபாத்யாய் (மயக்கம் என்ன)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகை - தேவதர்ஷினி (மகான் கணக்கு)

சிறந்த கதை - புகழேந்தி தங்கராஜ் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த திரைக்கதை- சுசீந்திரன் (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம் நாதன் (கோ)

சிறந்த பாடலாசிரியர் - காசி ஆனந்தன் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த தயாரிப்பு நிறுவனம் - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த வில்லன் - சம்பத் (வர்ணம் & ஆரண்ய காண்டம்)

சிறந்த காமெடி - கஞ்சா கருப்பு (போராளி)

சிறந்த காமெடி - சூரி (போராளி)

சிறந்த பின்னணி பாடகர் - சத்யா ('மாசமா...' எங்கேயும் எப்போதும்)

சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ('சர சர சாரக் காத்து...'- வாகை சூட வா)

சிறந்த நடனம் - பாபி (போறானே... - வாகை சூட வா)

சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - பீட்டர் ஹெய்ன் (கோ)

சிறந்த ஸ்டன்ட் நடிகர் - கணேஷ் பாபு (மகான் கணக்கு)

சிறந்த எடிட்டிங் - கோலா பாஸ்கர் (மயக்கம் என்ன)

சிறந்த கலை இயக்குநர் - சீனு (வாகை சூட வா)

சிறந்த பின்னணிக் குரல் - தீபா வெங்கட் (மயக்கம் என்ன)

சிறந்த புதுமுகம் - நீனிகா (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த மேக் அப் - கேபி சசிகுமார் (வாகை சூட வா)

சிறந்த உடை அலங்காரம் - நட்ராஜ் (வாகை சூட வா)


சிறப்பு விருதுகள்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வெங்காயம்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - நர்த்தகி

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - பாலை

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வர்ணம்

வாழ்நாள் சாதனையாளர் விருது - ரகுநாதன்

கலைச்சிகரம் விருது - சத்யராஜ்
நள்ளிரவுச் சூரியன் விருது - உச்சிதனை முகர்ந்தால்


தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் படத்துக்கான சிறப்பு விருது கவுரவ் இயக்கிய தூங்கா நகரம் படத்துக்கு வழங்கப்பட்டது.
Close
 
 

Post a Comment