காதலர் சைப் அலியின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்- சோகத்தில் கரீனா

|

23 Kareena Cancelled Her 31st B Day Celebrations Aid0180  
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் மரணத்தை தொடர்ந்து, இந்தி நடிகை கரீனா கபூர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார். தனது திருமணத்திற்கு முன்பே மன்சூர் அலிகான் இறந்து விட்டதால் அவர் பெரும் சோகத்துடன் காணப்படுகிறார்.

இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்தி நடிகை கரீனா கபூர் செப்டம்பர் 21 தேதி தனது 31 வயதை கடந்தார். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடும் கரீனா, அன்று எல்லா பணிகளுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு தனது உயிர் நண்பரும், நடிகருமான சயீப் அலிகான் மற்றும் தனது குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடுவார்.

சயீப் அலிகான் மற்றும் கரீனா கபூரின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில், இந்தாண்டு கரீனாவின் பிறந்தநாள் விழா படுவிமரிசையாக கொண்டாட கரீனா திட்டமிட்டு இருந்தார். கரீனாவிற்கு கூடுதல் மகிழ்ச்சியாக கடைசியாக வெளியான அவரது திரைப்படமான 'பாடிகாட்' சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சயீப் அலிகானின் தந்தையும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான பட்டோடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தனது நண்பர் சயீப்பின் வேண்டுகோளை ஏற்று தனது இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாடத்தை கரீனா ரத்து செய்தார்.

இந்த நிலையில், நேற்று பட்டோடி உயிரிழந்தால், கரீனா கபூர் பெரும் சோகமடைந்தார். மன்சூர் அலிகான் பட்டோடியின் குடும்பத்தினருடன் அவர் ஆறுதலாக தங்கியுள்ளார்..
Close
 
 

Post a Comment