ஜூனில் விஸ்வரூபம் ஆடியோ?

|

Vishwaroopam Audion June   
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் சிறப்பு ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இவற்றில் பெரும்பகுதியை அமெரிக்காவில் வைத்து முடித்துவிட்டாராம் கமல். எப்போதும்போல இந்த முறையும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஎப்எக்ஸ் மது.

படத்தின் முதல் ஸ்டில் வெளியானதிலிருந்து, விஸ்வரூபம் குறித்த கமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாகிவிட்டது.

அதுபுரிந்து, பெரிய விலைக்கு வியாபாரம் பேசி வருகிறாராம் கமல்ஹாஸன்.

இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போகிறது ஜெயா டிவி என முதலில் செய்திகள் வந்தன. இப்போது அதில் குழப்பம். ஜெயா டிவி இல்லை... சன் டிவிதான் வாங்கப் போகிறது என யூக செய்திகள் வெளியாகிவருகின்றன.

விஸவரூபம் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்கள். ஏற்கெனவே ஆளவந்தானுக்கு இவர்கள்தான் இசை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களை ஜூனில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை இறுதிக்குள் படத்தை வெளியிடப் போகிறார்களாம்!
 

Post a Comment