மும்பையில் வீடு பார்த்தாச்சு ... பால் காய்ச்சி குடியேறும் ஸ்ருதி ஹாசன்!

|

Shruti Hassan Move Into Her Mumbai Apartment   
நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். அங்கு குடி போகப் போகிறாராம்.

நடிகை ஸ்ருதி ஹாசன் பாலிவுட் படமான லக்கில் தான் அறிமுகமானார். லக் அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் ஏழாம் அறிவு அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் பவன் கல்யாணுடன் நடித்த தெலுங்கு படமான கப்பார் சிங் சக்கை போடு போடுகிறது. இந்நிலையில் ஸ்ருதிக்கு பாலிவுட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்துள்ளார். அவரது தாய் சரிகா மற்றும் தங்கை அக்ஷரா தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தான் இந்த வீடு உள்ளது. விரைவில் அவர் மும்பையில் குடியேறுகிறாராம்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மும்பையில் வீடு பார்த்திருக்கிறேன். மும்பைக்கும் எனக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது தாயும், தங்கையும் அங்கு தான் உள்ளனர். நான் கூட பந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் கல்லூரியில் தான் படித்தேன். அதனால் மும்பை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. அதனால் நான் பந்த்ரா பெண்ணாகிவிட்டேன் என்றார்.
Close
 
 

Post a Comment