வீட்டு மனைகளை கூவி கூவி விற்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!

|

Land Selling Advertisement Models Tv Artist
இப்போதெல்லாம் காலை நேரத்தில் எந்த டிவி சேனலை போட்டாலும் யாராவது ஒரு நடிகை வீட்டு மனை விற்பனை விளம்பரத்தில் வருகிறார்.

நிலத்தை விற்பனை செய்யும் புரமோட்டர்கள் இப்பொழுதெல்லாம் வீட்டுமனையை விற்பனை செய்ய கவலையே படுவதில்லை. யாராவது சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியை சைட்டிற்கு அழைத்துச் சென்று பேச வைத்து நில விற்பனையை எளிதாக்கி விடுகிறார்கள்.

சின்னத்திரை நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் இந்த நில விற்பனை விளம்பரத்தில் மாடலிங் செய்ய தொடங்கிவிட்டனர். நிழல்கள் ரவி, டெல்லிகணேஷ் தொடங்கி ( அவர்களும் சின்னத்திரையில் நடிப்பதால் மக்களுக்கு அதிக அறிமுகம் ஆகியுள்ளவர்கள் தானே) சஞ்சீவ் வரை பலரும் வீட்டுமனை விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.

தேசிய நெடுஞ்சாலை பக்கத்தில் இருக்கும் வீட்டுமனைகளை விற்பனை செய்யும் புரோக்கர்களாக மாறிவரும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு சம்பளமாக அந்த நிலத்தில் இருந்து ஒரு வீட்டுமனை தரப்படுகிறதாம் ( ப்படியா! ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!)

சன், கலைஞர், புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களைத்தவிர வசந்த், இமயம், விஜய், உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் வீட்டுமனை விற்பனை செய்யும் விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டனர்.

எங்கேயோ கடைக்கோடியில் இருக்கும் நிலத்தை மாயாஜால வார்த்தை பேச்சுக்களின் மூலம் கூவி கூவி விற்பனை செய்கின்றனர்

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இங்கு நிலம் வாங்கி குடியேறியவர்கள்தான் கூறவேண்டும்.
Close
 
 

Post a Comment