பிரியதர்ஷனுக்காக மம்மூட்டி மகனுக்கு தந்தையாகும் மோகன்லால்

|

Junior Mammooty Act As Mohanlal Son
மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு அப்பாவாக நடிக்கிறார்.

மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் பிரியதர்ஷன். அவர் தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். அதில் மோகன்லாலுக்கு மகனாக இன்னொரு சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதில் விந்தை என்னவென்றால் இதுவரை பிரியதர்ஷன் மம்மூட்டியை தனியாக வைத்து ஒரு படம் கூட இயக்கியதில்லை.

இன்னும் பெயர் வெளியிடப்படாத அந்த படம் ஒரு காமெடிப் படமாம். வரும் ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் துவங்குகிறது. படம் டிசம்பரில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

மோகன்லாலும், மம்மூட்டியும் தாங்கள் நண்பர்கள் என்று கூறினாலும் ஒருவர் படத்தின் வசூலை இன்னொருவர் முறியடிப்பதே வேலையாகிவிட்டது. ஆனால் தற்போது இருவருமே ஹிட் கொடுக்க போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி போட்டா போட்டி போடும்போது மம்மூட்டியின் மகன் மோகன்லாலுக்கு மகனாக நடிக்கப் போவது மாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Post a Comment