நயன்தாரா வாய்ப்பு பாவனாவுக்கு போனது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நயன்தாரா பட வாய்ப்பு பாவனாவுக்கு போனது. சுதீப் நடிக்கும் கன்னட படம் 'பச்சன்'. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க  ஒப்புக்கொண்டிருந்தார்.  இதையடுத்து படவேலைகளை முடுக்கிவிட்டார் இயக்குனர் சஷாங்க். இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து படத்திலிருந்து வெளியேறினார். திடீரென்று நயன்தாரா வெளியேறியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீரோயினாக பாவனா தேர்வு செய்யப்பட்டார். பருல் மற்றும் தீபா சன்னிதி என மேலும் 2 ஹீரோயின்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுபற்றி இயக்குனர் கூறும்போது,''தமிழில் அஜீத் படத்திற்கு நயன்தாரா தனது கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறினார். தற்போது பாவனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் ஹீரோயின் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினோம். இவரைத்தவிர வேறு ஹீரோயினை இந்த வேடத்துக்கு பொருத்திப்பார்க்க முடியவில்லை. பாவனா எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வார். ஏற்கனவே விஷ்ணுவர்த்தனா என்ற படத்தில் சுதீப், பாவனா இணைந்து நடித்திருக்கின்றனர். வெற்றி ஜோடி மீண்டும் இணைவது பிளஸ். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்கு ஒத்துப்போகும்'' என்றார்.


 

Post a Comment