கோடி, கோடியா கொடுத்தாலும் பார்ட்டிகளில் ஆட மாட்டேன்: ஜான் ஆபிரகாம்

|

24 I Never Perform At Weddings Birthdays John Aid0128  
கோடி, கோடியாகப் பணம் கொத்தாலும் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டிகளில் ஆட மாட்டேன் என்று இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

பணக்காரர்கள் தங்கள் வீட்டு பிறந்தநாள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பிரபல நடிகர், நடிகையரை அழைத்து நடனமாட வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி ஒரு வைர வியாபாரி தனது திருமணத்திற்கு வந்து ஆடுமாறு ஜான் ஆபிரகாமை அழைத்துள்ளார். சும்மா இல்ல ரூ. 6 கோடி தருகிறேன் என்றிருக்கிறார். ஆனால் ஜான் வர மறுத்துவிட்டார்.

இந்த ஜான் பிழைக்கத் தெரியாதவரா இருக்காரே. யாராவது ரூ. 6 கோடிய வேண்டாம்னு சொல்லுவார்களா என்று பாலிவுட்டில் சிலர் கூறுகின்றனர்.

ஜான் ஆபிரகாம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா,

நான் நடிக்க வந்ததில் இருந்தே இது போன்று பலர் என்னை அழைக்கி்ன்றனர். தற்போது என்ன வித்தியாசம் என்றால் ஆண்டுதோறும் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இவ்வளவு பணம் தருகிறேன் என்று சொல்லியும் மறுக்கலாமா என்று பலர் என்னைக் கேட்கின்றனர். ஆனால் நான் இன்னும் மறுத்து தான் வருகிறேன். திருமணம், பிறந்தநாள் விழாக்களில் ஆடமாட்டேன் என்பது என் கொள்கை. அதே போன்று மது மற்றும் சிகரெட் விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்.

பலர் என்னிடம் இது போன்ற விழாக்களுக்கு வரும் அழைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். ஒரு நடிகனை திரையில் தான் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

யார் என்றே தெரியாதவர்கள் வீட்டு விழாக்களில் நான் எப்படி ஆட முடியும். பலர் என்னை முட்டாள் என்று சொல்வது எனக்குத் தெரியும் என்றார்.
 

Post a Comment