துப்பாக்கியில் நான் நடிக்கவே இல்லை! - சரத் மறுப்பு

|

Sarath Kumar Declines His Role Thuppakki
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.

ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், "எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே ஏகப்பட்ட போன்கால்கள், துப்பாக்கியில் நடிப்பது குறித்து.

கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது! இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட வெளியிட்டுவிடுவதா?

மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்றைய தேதிக்கு தமிழில் ரஜினி சாருடன் கோச்சடையான், மலையாளத்தில் சில படங்கள், கன்னடத்தில் படங்கள் என நான் ரொம்ப பிஸி. விரைவில் சினேகாவும் நானும் நடித்த விடியல் படம் வெளியாகவிருக்கிறது," என்றார்.
Close
 
 

Post a Comment