மங்கையர் மன்றம்: அம்பிகாவிற்கு பதில் யுவராணி?

|

Actress Yuvarani Host Mangayar Mandram
கே டிவியில் ஒளிபரப்பாகி வரும் மங்கையர் மன்றம் நிகழ்ச்சியை இனி நடிகை யுவராணி நடத்துவார் என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது. இதுநாள் வரை அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த நடிகை அம்பிகா அடிக்கடி ஓய்வெடுக்க சென்றுவிடுவதால் அவருக்கு பதிலாக யுவராணியை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர்.

சன் டிவியின் அரட்டை அரங்கம் போல கே டிவியில் மங்கையர் மன்றம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதனை பல குழுக்களாக பிரிந்து விவாதம் நடத்தி அதற்கு சரியான தீர்வினை நடுவர் கூறுவார். இந்த நிகழ்ச்சியை நடிகை அம்பிகா ஊர் ஊராக சென்று நடத்தி வந்தார்.

அம்பிகாவிற்கு அடிக்கடி உடல் நிலையில் பிரச்சினை எழவே அவர் ஓய்வெடுக்க அடிக்கடி கேரளா சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் யோசித்த நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பினர் அம்பிகாவிற்கு பதில் யுவராணியை களம் இறக்க திட்டமிட்டுள்ளனராம்.

யுவராணி தற்போது தென்றல் உள்ளிட்ட பிரபலமான நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார். அதனால் டிவி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் மங்கையர் மன்றம் நிகழ்ச்சியிலும் யுவராணி கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Close
 
 

Post a Comment