ஒரு வழியாக பேத்தியின் பெயரை அறிவித்த அமிதாப் பச்சன்

|

Big B Confirms Granddaughters Name Aaradhya
ஐஸ்வர்யா-அபிஷேக்கின் மகள் பெயர் ஆராத்யா தான் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பு எந்த தேதியில் பிறக்கும், ஆணா, பெண்ணா என்று ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. ஏராளமானோர் பெட் கூட வைத்தனர். இன்று குழந்தை பிறக்கப் போகிறது, நாளை பிறக்கப் போகிறது என்று ஒரு வழியாக குழந்தையை பெற்றெடுத்தார் ஐஸ்வர்யா.

குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகியும் அதை உலகத்தார் பார்வையில் காட்டாமல் பத்திரமாக வைத்துள்ளனர். சரி அது அவர்கள் இஷ்டம். அபிஷேக் பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மக்களிடம் டுவிட்டரில் கேட்டிருந்தார். நம்மாள்களும் ஏதோ இவர்கள் சொல்லும் பெயரைத் தான் அவர்கள் வைக்கப்போவது போன்று போட்டி போட்டுக் கொண்டு பெயர்களை பரிந்துரைத்தனர்.

ஆனால் அவர்கள் பெயரையும் கமுக்கமாக வைத்துவிட்டனர். ஊடகங்கள் எப்படியோ குழந்தையின் பெயர் ஆராத்யா என்று கண்டிபிடித்தன. ஆமாம் ஆராத்யா தான் குழந்தை பெயர் என்றும் பச்சன் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு அமர்க்களத்திற்கு பிறகு ரசிகை ஹசீனா வாசீர் என்பவர் கேட்டுக் கொண்டபிறகு அமிதாப் தனது பேத்தியின் பெயர் ஆராத்யா தான் என்று டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
Close
 
 

Post a Comment