சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னா

|

Tamanna S Too Close With Chiru Family   
நடிகை தமன்னாவுக்கு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் காட்பாதர்ஸ் போன்றவர்களாம்.

தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் தேய்ந்து போனதால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு அவர் நடித்த படங்கள் ஹிட்டாகவே அம்மணி உச்சத்தில் இருக்கிறார். மேலும் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் தமன்னா சிரஞ்சீவி குடும்பத்தாருக்கே முன்னுரிமை கொடுக்கிறாராம். இது மற்ற இளம் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. மேலும் அவர் பிற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்றால் கூட சிரஞ்சீவி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏன் தமன்னா இப்படி ஒரு ஓரவஞ்சனை என்று கேட்டால், சிரஞ்சீவி குடும்பத்தார் எனக்கு காட்பாதர்ஸ் போன்றவர்கள். அவர்களுடன் நட்பாக இருப்பது எனக்கு தான் பிளஸ் பாயிண்ட் என்றார்.

முன்னதாக சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா, தமன்னா நடித்த ரச்சா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி தமன்னாவின் அழகை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியது நினைவிருக்கலாம். மேலும் தமன்னாவுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க ராம் சரண் டிப்ஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment