இந்தியிலும் 'சொதப்புவாரா' அமலா பால்?

|

Will Amala Paul Enter Into Bollywood   
தமிழில் எப்படியோ ஹிட்டாகி விட்ட காதலில் சொதப்புவது எப்படி படம் இப்போது இந்திக்கும் போகிறதாம். இதிலும் தானே நாயகியாகி விட அமலா பால், இயக்குநரிடம் துண்டைப் போட்டு வைத்துள்ளாராம்.

அமலா பால், சித்தார்த் ஜோடியாக நடிக்க பாலாஜி இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்புவது எப்படி. இப்படம் எப்படியோ தமிழில் ஹிட்டாகி விட்டது. சத்தம் போடாமல் ஓடினாலும் கூட சத்தான முறையில் ஓடியதால் இப்போது இப்படத்தை இந்திக்கும் கொண்டு போகிறார்களாம்.

இதே பாலாஜிதான் இந்தியிலும் இயக்கப் போகிறார். படத்தின் நாயகன், நாயகியாக யாரைப் போடலாம் என்ற பரிசீலனை நடந்து வருவதாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்ட அமலா பால், உடனே இயக்குநரைத் தொடர்பு கொண்டு, இந்தியிலும் நானே நடிக்க விரும்புகிறேன், வேறு யாரையும் முடிவு செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இருப்பினும் பாலாஜி சரி என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

சமீப காலமாக தெற்கத்தி நடிகைகள் பாலிவுட்டை நோக்கி பாய்ந்து வருகின்றனர். இருந்தாலும் யாரும் செமத்தியான ஹிட்டடிக்கவில்லை. இதனால் அடுத்த ஸ்ரீதேவி என்ற பெயரையும் யாராலும் எடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அமலா பாலும், இந்திக்குச் சென்று சொதப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Close
 
 

Post a Comment