'சந்திரா'வுக்காக சம்பளத்தைக் குறைத்த ஷ்ரியா!

|

Shriya Saran Reduces Remuneration Chandra
தான் முதல் முறையாக கன்னடத்தில் நடக்கும் சந்திரா படத்திற்காக சம்பளத்தை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளாராம் ஷ்ரியா.

சரியான இடுப்பழகி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டவரான ஷ்ரியா இப்போது தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து விட்டார். சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வரும் ஷ்ரியா கன்னடத்தில் சந்திரா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவர் தனது சம்பளத்தைக் கூட வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளாராம்.

ஷ்ரியாவின் தற்போதைய மார்க்கெட் ரேட் 70 முதல் 80 லட்சம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கன்னட மார்க்கெட்டில் அந்த அளவுக்கு தந்தால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது என்று அவரிடம் எடுத்துக் கூறப்பட்டதால் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டாராம் ஷ்ரியா.

எவ்வளவு சம்பளத்திற்கு ஷ்ரியா நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு முதலிடத்தில் உள்ள குத்து ரம்யாவுக்கு தரப்படும் சம்பளமே ஷ்ரியாவுக்கும் தரப்படுவதாக கூறப்படுகிறது.

முதலில் ரம்யாவைத்தான் இந்தப் படத்திற்குக் கூப்பிட்டனராம். ஆனால் சில பல காரணங்களால் அவர் மறுத்து விட்டாராம். பிறகு அமலா பாலை நாடினார்கள், தியா மிர்ஸாவை தேடினார்கள், அம்ரிதாவை ராவை நாடி ஓடினார்கள். எல்லோருமே விலகிப் போனதால் ஷ்ரியாவை 'ப்ரீஸ்' செய்து 'பிக்ஸ்' பண்ணி விட்டனர்.

இப்படத்தில் இளவரசி வேடத்தில் வருகிறாராம் ஷ்ரியா. படத்தை இயக்குவது ரூபா ஐயர். படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் முக்கிய ரோல்களில் வருகின்றனராம்.

ஷ்ரியாவுக்கு கன்னடத்தில் இதுதான் முதல் ஹீரோயின் படம் என்றாலும் கூட ஏற்கனவே புனீத் ராஜ்குமார் நடித்த அரசு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போயுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
Close
 
 

Post a Comment