ஹாங்காங்கில் ஷூட்டிங் முடிந்தது : சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாங்காங்கில் 'கோச்சடையான்' படிப்பிடிப்பு முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தயாரித்து இயக்கி வரும் 'கோச்சடையான்' படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ரஜினி, தீபிகா படுகோன் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் லண்டனுக்கு சென்று 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். அதன் பின்பு கேரள மாநிலத்திலும் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி அதிகாலை படப்பிடிப்புக்காக ஹாங்காங் சென்றார் ரஜினிகாந்த். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கு கேத்தே பசிபிக் ஏர்லைன் விமானத்தில் ரஜினிகாந்த், சென்னை திரும்பினார். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்கி காரில் ஏற வந்தபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள், கையை அசைத்து கொண்டு காரை நோக்கி ஓடினர். அப்போது அங்கிருந்த விமான நிலைய போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். ரசிகர்களை பார்த்து ரஜினி கையை அசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.


 

Post a Comment