கே. பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சரியக்குறி!

|

K Balachandar Comes With Amutha Oru Acharyakuri
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு அடுத்ததாக பாலசந்தர் இயக்கும் புதிய தொடர் ‘அமுதா ஒரு ஆச்சரியக்குறி’ இது ஜெயா டிவிக்காக அல்ல கலைஞர் டிவிக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் சிறப்பம்சம்.

சினிமாவில் ஜாம்பவான் இயக்குநராக இருந்த கே. பாலசந்தர் சின்னத்திரையின் வரவிற்குப் பிறகு பொதிகையில் தொடங்கி சன், கலைஞர், ஜீ தமிழ், ஜெயா டிவி என பிரபல தொலைக்காட்சிகளில் சிறப்பு வாய்ந்த நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார். தற்பொழுது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதனையடுத்து புதிய தொடருக்கான வேலையில் பிஸியாகிவிட்டார் பாலசந்தர். நெடுந்தொடருக்கான தலைப்பு “அமுதா ஒரு ஆச்சரியக்குறி”

இந்த தொடரில் கே.பாலசந்தரின் ஆஸ்தான நட்சத்திரங்களான "கவிதாலயா' கிருஷ்ணனும் ரேணுகாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் தொடரின் கதையைப் பற்றி அண்மையில் கலைஞரை சந்தித்து பாலசந்தர் கூறியுள்ளார்.

கதையைக் கேட்டறிந்த கலைஞர் மகிழ்ச்சியடைந்து பாலசந்தரை பாராட்டியதோடு தொடரின் தலைப்பைப் பற்றிக் கேட்டுள்ளார். "கமலா ஒரு கேள்விக்குறி' என்று பாலசந்தர் கூறிய உடன் அதனை "அமுதா ஒரு ஆச்சர்யக்குறி' என்று மாற்றியிருக்கிறார் கலைஞர். பாலசந்தருக்கும் அந்தத் தலைப்பு மிகவும் பிடித்துவிட அதனையே விளம்பரப்படுத்திவிட்டார்.
Close
 
 

Post a Comment