மாற்றானை பெரும் விலைக்கு வாங்கிய ஈராஸ்!

|

Eros Grabbed Theatrical Rights Surya Maatran
சூர்யாவின் மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது, ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.

கேவி ஆனந்த் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள மாற்றான் படம், ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புக்குரியதாக இருந்தது.

இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யாவும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

மாற்றானின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமை மற்றும் தமிழ் ஆடியோ வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஈராஸ்.

அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், "பிராந்திய மொழி சினிமாவில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டும் வகையில் மாற்றானை வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களை வாங்கி வெளியிட உள்ளோம்," என்றார்.
 

Post a Comment