ஹீரோயின் முக்கிய வேடத்தில் நடிக்க, ஹீரோவே இல்லாத படமாக உருவாகிறது 'வதம்'. இது பற்றி இயக்குனர் மதிவாணன் கூறியதாவது: மூடுபனி, உச்சகட்டம் போன்ற த்ரில்லான படங்கள் தமிழில் வந்து நீண்ட காலம் ஆகிறது. அந்த பாணியிலான திரில் படமாக உருவாகிறது 'வதம்'. இதில் ஹீரோ கிடையாது. பூனம் கவுர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'நெஞ்சிருக்கும் வரை', 'வெடி' படங்களில் நடித்தவர். நாவலாசிரியராக வேடம் ஏற்கும் பூனம் நடித்த த்ரில் காட்சிகள் கொடைக்கானலில் ஷூட்டிங் நடந்துள்ளது. 'அங்காடி தெருÕவில் மாறுபட்ட வேடத்தில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ், போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மணிகண்டன், ரஞ்சன், சர்வஜித், பேபி வர்ஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
Post a Comment