எல்லோரையும் டாப் நடிகை என்பதா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எல்லோரையும் டாப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டாப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. 'பாணா காத்தாடிÕ, 'மாஸ்கோவின் காவிரிÕ ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது: இந்த வருடம் நான் நடித்து 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனாலும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. சந்தோஷமாக இல்லாததற்கு காரணம் என்ன என்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் பெரும்பாலான நடிகைகளை நம்பர் ஒன் நடிகைகள் என்று சொல்கிறார்கள். என்னையும் அந்த பட்டியலில் குறிப்பிடுகிறார்கள். நான் கேட்கிறேன், நம்பர் ஒன்னாக ஒருவர்தானே இருக்க முடியும். ஆனால் அத்தனைபேரையும் நம்பர் ஒன் என்று எப்படி சொல்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நடிகையின் தலையெழுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் நிஜம்.
 
மணிரத்னம், கவுதம் மேனன் என பெரிய இயக்குனர்களுடனும், மகேஷ் பாபு, நாக சைதன்யா உள்ளிட்ட டாப் நடிகர்களுடனும் நடித்து வருகிறேன். இதுதவிர ஒப்புக்கொள்ளாத படங்கள் நிறைய உள்ளன. பெரிய இயக்குனர்கள், பெரிய படங்கள் என்பதை நானாக தேர்வு செய்யவில்லை. அது தன்னால் அமைந்தது. இண்டஸ்ட்ரிக்கு வந்து 2 வருடங்களில் இவ்வளவு பெரியவர்களுடன் பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என்ற கருதுகிறேன். ஒரே படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். பள்ளி மாணவி தோற்றத்துக்காக உடல் இளைக்க வேண்டி உள்ளது. கல்லூரி மாணவிக்காக சற்று குண்டாக வேண்டி உள்ளது. இதெல்லாம் புதிய அனுபவம். மணிரத்னம் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருப்பதைவிட பயமாகவே உணர்கிறேன். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் அவருடைய எதிர்ப்பார்ப்பு என்னை நடுங்க வைக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.


 

Post a Comment