மலையாளத்திலும் நீங்களும் ஆகாலாம் கோடீஸ்வரன்!- சுரேஷ் கோபி நடத்துகிறார்

|

Suresh Gopi On Hosting Malayalam Version Kbc
தமிழ் தொலைக்காட்சிகளில் என்ன மாதிரி நிகழ்ச்சிகள் டாப்பில் உள்ளனவோ, அதை அப்படியே மலையாளத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது ரொம்ப நாள் வழக்கம்.

இப்போது எந்த சேனலைத் திறந்தாலும் யாராவது ஒரு பிரபலம் கட்டுக் கட்டாக நோட்டுக்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டே இருக்கிறார், கேம் ஷோ என்ற பெயரில்.

அந்த ட்ரெண்ட் இப்போது மலையாளத்திலும் தொடர ஆரம்பித்துள்ளது. தமிழில் சூர்யா கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்துவது போல, மலையாளத்தில் நடத்துகிறவர் பிரபல நடிகர் சுரேஷ் கோபி.

ஏசியா நெட்டில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்களும் ஆகாம் கோடீஸ்வரன் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதுவரை 16 எபிசோடுகள் ஒளிபரப்பாகிவிட்டன.

சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில்தான் இந்த நிகழ்ச்சியைப் படமாக்குகிறார்கள்.

இதுகுறித்து சுரேஷ் கோபி கூறுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு ஏக ரெஸ்பான்ஸ். ஆகஸ்ட் 23 வரை இந்த நிகழ்ச்சிக்காக தொடர்ந்து ஷூட்டிங்கில் இருப்பேன். இதன் அடுத்த ரவுண்ட் வரும் ஜனவரியில் ஒளிபரப்பாக இருந்தது. கிடைக்கிற வரவேற்பைப் பார்த்து, இன்னும் முன்பாகவே தொடரச் சொல்லியிருக்கிறேன்," என்றார்.
 

Post a Comment