பாண்டிச்சேரியில் குத்தாட்டம் போட்ட ரீமா!

|

Reema Sizzles Pondycherry
கல்யாண கையோடு மீண்டும் கோடம்பாக்கத்தில் திறமை காட்ட வந்துவிட்ட ரீமா சென், இப்போது கேம்ப் அடித்திருப்பது பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியில்!

அம்மணியின் போஸ்ட் மேரேஜ் இன்னிங்ஸின் முதல் படம் விஜய் தயாரிப்பில் உருவாகும் சட்டம் ஒரு இருட்டறைதான்.

இந்தப் படத்தில் அவர் ஐட்டம் டான்ஸராக வருகிறார். இவரது ஆட்டம் மட்டும் 'ஆட்டத்துக்குப் பேர் போன' புதுச்சேரி தெருக்களில் நடத்தப்பட்டது. ரீமாவைப் பார்க்க ஏகக் கூட்டம் கூடிவிட்டதாம்.

இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் எஸ் ஏ சந்திரசேகரன்தான். ஆனால் இயக்குநர் மட்டும் அவரில்லை.

ஆம், தன்னிடம் உதவியாளராக இருந்த சினேகா என்ற பெண்ணை வைத்து இயக்குகிறார் எஸ் ஏ சி. (ஏதாவது சென்டிமென்ட் இருக்குமோ?)

ஏற்கெனவே ஒரு படத்தை சேனாபதி மகன் என்ற பெயரில் எஸ் ஏ சந்திரசேகரனே இயக்கியதாகச் சொல்வார்கள்!

இந்த புதிய சட்டம் ஒரு இருட்டறையில் பிரபு மகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். விஜய் ஆன்டனி இசை அமைக்கிறார். நடிகர் கில்லி பிலிம்ஸ் சார்பில் விஜய் தயாரிக்கிறார்.
 

Post a Comment