இயக்குநரை அதிரவைத்த 'மிரட்டல்' ஹீரோயின் ஷர்மிளா!

|

Madhesh S Come Back Movie Mirattal
இந்த மடம் இல்லன்னா சந்த மடம் என்பது தமிழ் சினிமாவில் வழக்கமான வழக்குச் சொல். ஒரு புது நடிகை அதை மாற்றியிருக்கிறார்.

இயக்குநர் மாதேஷ் சொன்னார் என்பதற்காக இரு ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து, இயக்குநர் சொன்ன மாதிரி படுபிட்டாக வந்து நிற்க, ஆச்சர்யம் அதிர்ச்சியுடன் வாய்ப்பை வழங்கினாராம் மாதேஷ்.

அந்த நடிகை பெயர் ஷர்மிளா. மும்பைப் பொண்ணு. பல இடங்களில் வாய்ப்புக் கேட்பது போலத்தான் மாதேஷிடமும் கேட்டாராம்.

"நான் அந்தப் பொண்ணு போட்டோவப் பாத்ததும் முடிவு பண்ணிட்டேன். உடனே ஷர்மிளாவைக் கூப்பிட்டு, இரண்டு உடற்பயிற்சிகளைச் சொல்லி, செஞ்சுட்டு வான்னு அனுப்பினேன். திரும்ப வரமாட்டங்கன்னுதான் நினைச்சேன். ஆனால், இரண்டு வருஷம் கழிச்சி வந்து நின்னாங்க. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. உடனே வாய்ப்புக் கொடுத்தேன்.

இது ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படம். வினய்தான் இதுக்கு சரியா இருப்பாருன்னு முதலிலேயே முடிவு செய்து அவரை நடிக்க வச்சேன்," என்றார் மாதேஷ்.

மிரட்டல் படத்தில் இதுவரை பார்த்திராத பல லொகேஷன்கள் உள்ளனவாம். முக்கியமானது லண்டன் பார்லிமெண்ட் கட்டடம். நடிகர் திலகம் சிவாஜி வீட்டிலும் ஷூட் செய்துள்ளாராம்.
 

Post a Comment