வெளிநாட்டு அழகிகள் வரவால் நம்மூர் ஹீரோயின்கள் திணறல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சேர்ந்த புருனா அப்துல்லா (ப¤ல்லா 2), தாய்லாந்து நடிகை பிங்கி (மார்கண்டேயன்), மல்லுவுட்டில் ஃபரிஸா (அன்னும் இன்னும் என்னும்), சீன நடிகை சாங் ஷு மின் (அராபி கதா), ஆஸ்திரேலியா நடிகை டனிலியா (ஸ்பேனிஸ் மசாலா), டோலிவுட்டில் ஈரானை சேர்ந்த மரியம் ஸக்கரியா (100 பர்சன்ட் லவ்), நதாலியா கவுர் (ராம் கோபால் வர்மா தயாரிக்கும் படம்) என வெளிநாட்டு நடிகைகளின் ஆதிக்கம் வட, தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகரித்திருக்கிறது.

திரையுலகில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் நம்மூர் ஹீரோயின்களை திணற வைத்திருக்கிறது. குறிப்பாக கிளாமர் காட்சிகளில் அவர்களுக்கு ஈடுகொடுப்பது சவாலாக இருக்கிறது. முன்னணி நடிகர், இயக்குனர் படங்களில் இவர்களின்  கை ஓங்கி வருவதால் அந்த வாய்ப்புகளை நம்மூர் முன்னணி நடிகைகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.
இந்த புதிய டிரெண்ட் குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும¢போது, ''பாலிவுட்டில் முதல் படம் இயக்குகிறேன்.

சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர வெளிநாட்டு நடிகைகளை ஒப்பந்தம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகை பொருத்தவரை சமீபகாலம் வரை மும்பை நடிகைகளை ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். அதுதான் இப்போது வெளிநாட்டு நடிகைகளின் அறிமுகத்துக்கு வழிவகுத்திருக்கிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம். அதன் மற்றொரு பரிணாம வளர்ச்சிதான் வெளிநாட்டு நடிகைகளை அறிமுகப்படுத்துவதும். இதனால் நம்மூர் நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் இப்போது ஹாலிவுட் உள்பட வெளிநாட¢டு படங்களில் நடிக்கிறார்கள்" என்றார்.


 

Post a Comment