கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி மரணம்!

|

Kannadasan S Wife Passes Away
கவியரசர் கண்ணதாசன் முதல் மனைவி பொன்னம்மா ஆச்சி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79.

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற பாடலாசிரியராக, இலக்கிய உலகில் கவியரசராக, எழுத்தாளராகத் திகழ்ந்தவர் அமரர் கண்ணதாசன்.

அவரது முதல் மனைவி பொன்னம்மாள் ஆச்சி. உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்ற அவர், இன்று காலை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.

அவருக்கு கண்மணி சுப்பு உள்பட மூன்று மகன்களும், அலமேலு சொக்கலிங்கம் உள்பட 3 மகள்களும் உள்ளனர்.

கோடம்பாக்கம் சுப்பராய நகரில் ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோ அருகில் உள்ள வீட்டில் பொன்னம்மா ஆச்சி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.
Close
 
 

Post a Comment