திட்டமிட்டு படம் எடுத்தால் ஜெயிக்கலாம் : எஸ்.பி.முத்துராமன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கல்பகனூர் கலைக்கூடம் சார்பில் கொத்தாம்பட்டி முருகேசன், தயாரித்து, இசை அமைத்து, இயக்கும் படம், 'காதல் சீதனம்'. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, ''சிறு பட்ஜெட் படங்கள் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. புதிதாக சினிமாவுக்கு வருகிறவர்கள் திட்டமிட்டு படம் எடுக்க கற்றுக் கொண்டால் நிச்சயம் ஜெயிக்கலாம். அதே போல, இயக்குனர்கள் எல்லா பொறுப்புகளையும் இழுத்து போட்டு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். நேரம் தவறாமை முக்கியம். காலம் பொன் போன்றது என்பார்கள். அது தவறு. பொன்னை விலை கொடுத்து வாங்கிவிடலாம். காலம் உயிர்போன்றது. அதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்'' என்றார். விழாவில் பெப்சி முன்னாள் தலைவர் வி.சி.குகநாதன், இயக்குனர் பவித்ரன், பட ஹீரோயின் யோகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கொத்தாம்பட்டி முருகேசன் வரவேற்றார். முடிவில் இணை இயக்குனர் இந்திராணி முருகேசன் நன்றி கூறினார்.


 

Post a Comment