சித்தார்த்துடன் மோதும் பவர் ஸ்டார்!! - 'என் பட தலைப்பை பயன்படுத்துவதா?'

|

Power Star Srinivasan Opposes Sidhard Movie
பவர் ஸ்டார் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் டாக்டர் சீனிவாசனுக்கு மீண்டும் ஒரு பப்ளிசிட்டி!

ரஜினி, கமல் என டாப் நடிகர்களுடன் தன்னைச் சேர்த்து விளம்பரம் தேடும் பவர் ஸ்டாரை தேடி வந்திருக்கிறது ஒரு வாய்ப்பு.

இதில் சிக்கியவர் சித்தார்த். வேறு ஒன்றுமில்லை.... சீனிவாசன் பதிவு செய்து வைத்திருக்கும் படத் தலைப்பு ஒன்றை சித்தார்த் நடிக்கும் படத்துக்குப் பயன்படுத்திவிட்டார்களாம்.

அதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் சீனிவாசன். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ஏற்கெனவே பதிவு செய்த தலைப்பு இது. படப்பிடிப்பு வேறு நடக்கிறது. எனக்கு ஜோடியாக சங்கவி நடிக்கிறார். படத்தை சீக்கிரமே வெளியிடப் போகிறோம். இந்த நிலையில் அவர்கள் என் தலைப்பை பயன்படுத்தியுள்ளது தவறு. இந்தத் தலைப்பை யாருக்கும் தர முடியாது," என்றார்.

சித்தார்த் பட இயக்குனர் மணிகண்டன் இதுகுறித்து டாக்டர் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு கேட்டாராம். வலிய வந்து சிக்கிய வாய்ப்பை விடக் கூடாது என்று, பஞ்ச் வசனம் பேசி தலைப்பைத் தர மறுத்துவிட்டாராம் பவர் ஸ்டார்!
 

Post a Comment