குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் ரிலாக்ஸ் செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான்

|

Ar Rahman Family Holidaying Los Angeles
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்தாரோடு லாஸ் ஏஞ்சல்ஸில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான், மணிரத்னத்தின் கடல் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். எப்பொழுது பார்த்தாலும் பிசியாக இருக்கும் அவர் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நினைத்தார். இதையடுத்து அவர் ஒரு குட்டி பிரேக் எடுத்து தனது குடும்பத்தாருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.

ஓய்வெடுக்க அங்கு சென்றார். ஆனால் தான் ஒப்பந்தம் ஆகியுள்ள ஹாலிவுட் படமான மங்கீஸ் ஆப் பாலிவுட் பட வேலைகளையும் அவ்வப்போது கவனித்து வருகிறார். அங்குள்ள யூனிவர்சல் ஸ்டுடியோஸுக்கு தனது குழந்தைகளை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்துள்ளார். அப்போது ரஹ்மானைப் பார்த்த வெளிநாட்டவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கினர் என்று கூறப்படுகிறது.

இந்திய பிரபலகங்கள் வெளிநாடுகளில் ஓய்வு எடுக்கச் செல்வதே அங்கு தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று தான். ஆனால் ரஹ்மானோ உலக அரங்கில் பிரபலமான இசையமைப்பாளர். அவரை எப்படி வெளிநாட்டவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.
Close
 
 

Post a Comment