இந்திப் படங்களில் கவனம் செலுத்த மும்பையில் செட்டிலாக இருப்பதாக பிரபுதேவா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: தற்போது இந்தியில் 'ஏபிசிடி' படத்தில் நடித்துவருகிறேன். இது நடனம் தொடர்பான படம். நான் இயக்கியுள்ள 'ரவுடி ரத்தோர்' விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். விஜய், கரீனா கபூரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். எப்போதும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்க விரும்புகிறேன். ஆனால் டைரக்ஷனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். அப்படியென்றால் டான்ஸ்? என்று கேட்கிறார்கள். நடனம் எனது உயிர். அது எப்போதும் என்னுடனேயே இருக்கும். என்னை மட்டுமே சிறந்த டான்சராக நான் கருதவில்லை. இங்கு சிறந்த நடன கலைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். டிவி. நிகழ்ச்சிகள் உட்பட நம்மை சுற்றி திறமையான நடன கலைஞர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. மூன்று வருடத்துக்குப் பிறகு 'ரவுடி ரத்தோர்' மூலம் மீண்டும் இந்திக்கு வருகிறேன். தமிழில் கவனம் செலுத்தியதால் இந்திக்கு வரமுடியவில்லை. இந்திப் படங்களில் கவனம் செலுத்துவதற்காக மும்பையில் செட்டிலாகும் திட்டமும் என்னிடம் இருக்கிறது.
Post a Comment