சினிமாவிலிருந்து டிவி சீரியலுக்குத் தாவினார் திவ்ய பத்மினி!

|

Divya Padmini Enters Into Tv
சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி மூன்றே மூன்று படங்களில் மட்டுமே நடித்தவரான திவ்ய பத்மினி இப்போது சினிமா வாய்ப்புகள் வராமல் போனதால் டிவி பக்கம் வந்து விட்டார். பிள்ளை நிலா என்ற சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

2011ல் வெளியான புலிவேஷம் படம் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நடிகைதான் திவ்ய பத்மினி. ஆர்.கேவுடன் இணைந்து நடித்த இப்படம் ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது. இதையடுத்து திவ்ய பத்மினிக்கு அய்யன், விளையாட வா என இரண்டு புதிய படங்கள் கிடைத்தன.

தமிழுக்கு வருவதற்கு முன்பு மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்த திவ்ய பத்மினி, தமிழில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் வாய்ப்பு குறைந்து போனதே. இதற்காக அதீத கவர்ச்சி, பார்ட்டி என எதிலும் இறங்காமல் அதிரடியாக டிவி பக்கம் வந்து விட்டார் திவ்ய பத்மினி.

பிள்ளை நிலா என்ற புத்தம் புதிய டிவி சீரியலில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திவ்ய பத்மினி. சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தப் புதிய தொடரில் ஒரு குழந்தைதான் நாயகியாக நடிக்கிறது. அதாவது கதையின் முக்கியப் பாத்திரமே இந்தக் குழந்தைதான். இதை பின்னணியாக வைத்து மோதிக் கொள்ளும் இரு பெண்களின் கதைதான் பிள்ளை நிலாவாம். இரண்டு பெண்களில் ஒருவராக திவ்ய பத்மினி நடிக்கிறாராம்.

சினிமாவில் நடித்திருந்தால் குறைந்தபட்ச ரசிகர்களையே திவ்ய பத்மினியால் கவர்ந்திருக்க முடியும். ஆனால் அதிரடியாக டிவி சீரியலுக்கு வந்திருப்பதால், கண்களை சற்றே அழுத்திப் பிழிந்து அழுது வைத்தால் லட்சோபம் லட்சம் பெண்களின் ஆதரவைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் திவ்ய பத்மினி ரொம்ப டேக்டிக்கலாகத்தான் டிவி பெட்டிக்குள் புகுந்துள்ளார் என்று நம்பலாம்..!
 

Post a Comment