கோ பாலச்சந்தரின் 'அமுதா ஒரு ஆச்சர்யக்குறி'யில் ரேணுகா!

|

K Balachander Brings Renuka Again New Serial   
அமுதா ஒரு ஆச்சர்யக் குறி... இது கே பாலச்சந்தர் இயக்கும் புதிய தொடர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொடர் மூலம் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிறார், பாலச்சந்தரின் ஆஸ்தான நாயகிகளில் ஒருவர் எனப்படும் ரேணுகா!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்த நீண்ட தொடரை, கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது.

தொடரின் தலைப்பிலேயே கதையின் மொத்தமும் அடங்கியுள்ளது.

இந்த உலகிலிருக்கும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒளிந்திருக்கும் தைரியம் தன்னம்பிக்கையின் உருவமாக இந்த அமுதாவைப் படைத்திருப்பதாக இயக்குநர் பாலச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.

'இந்த அமுதாவிடம் மரபுகளை மீறாதவள்... அதே நேரம் முரண்பாடுகள் நிறைந்தவள். சின்னத்திரை ரசிகர்களுக்கு இவள் ஒரு புதிய அனுபவத்தைத் தருவாள்' என்கிறார் கேபி.

இந்தத் தொடரில் ரேணுகாவுடன், கவிதாலயா கிருஷ்ணன், வசந்த், வெங்கட், காவ்யா, ஷில்பா, விஜய் கிருஷ்ணராஜ் என பல பழகிய முகங்கள் நடிக்கின்றனர்.
Close
 
 

Post a Comment