என்னை விரட்ட யாராலும் முடியாது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'திரையுலகை விட்டு என்னை யாராலும் விரட்ட முடியாது' என்றார் ஹரிப்பிரியா. 'முரண்'. 'வல்லக்கோட்டை' படத்தில் நடித்திருப்பவர் ஹரிப்பிரியா. கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதையறிந்து கோபம் அடைந்த ஹரிப்பிரியா அதை மறுத்தார். இந்நிலையில் மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்றார். அவரிடம் விஜயேந்திராவுடனான தொடர்பு பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

கர்நாடக திரையுலகில் என் மீது பொறாமையுடன் இருக்கும் ஒருசிலர்தான் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள். அங்கு எனக்கென ஒரு இடத்தை பிடித்து வருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 4 மொழிகளிலும் நான் நடிக்கிறேன். இதுவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. திரையுலகில் இருந்து என்னை விரட்ட யாராலும் முடியாது. மற்ற மொழிகளில் எனக்கு கிடைக்கும் ஊக்கத்தைவிட கூடுதலான ஊக்கத்தை மலையாள ரசிகர்கள் தருகிறார்கள். என்னைப்பற்றிய வதந்திகள் படங்கள் ஹிட் ஆகும்போது தன்னால் மறைந்துவிடும். கன்னடத்தில் 'ஸ்ரீநகர் கிட்டி' என்ற படம் விரைவில் வருகிறது. சிக்கலான நேரத்தில் என் நண்பர்களும், குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள். அதுதான் எனக்கு பலம். இவ்வாறு ஹரிப்பிரியா கூறினார்.


 

Post a Comment