விஷாலுடன் ஜோடி; கார்த்திகா மறுப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிப்பதற்கான முக்கியத்துவத்தை குறைத்து வெறும் கிளாமர் வேடமாக மாற்றியதுடன், 2 ஹீரோயின் கதையாக மாற்றியதாலும் விஷால் படத்தில் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் கார்த்திகா.
சுந்தர்.சி. இயக்கும் படம் 'மத கஜ ராஜா' (எம்ஜிஆர்). நகைச்சுவை கதை அம்சத்துடன் கூடிய இப்படத்தில் விஷால் 3 வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஹீரோயினாக கார்த்திகா நடிக்கவிருந்தார். இந்நிலையில் படத்தில் நடிக்க மறுத்து கார்த்திகா வெளியேறிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, ''மத கஜ ராஜா படத்துக்கு முதலில் ஒரு கதை சொல்லப்பட்டது. பின்னர் ஸ்கிரிப்ட் புதிதாக மாற்றப்பட்டது. அதை கேட்டபோது ஷாக் ஆனேன். எனது கதாபாத்திரம் வெறும் கிளாமர் வேடமாக மாற்றப்பட்டிருந்தது. முதலில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பதாக இருந்தது. அதுவும் மாற்றப்பட்டதுடன் இரண்டு ஹீரோயின்கள் கதையாகவும் மாறி இருக்கிறது. எனவே இப்படத்தில் நடிக்கவில்லை. எதிர்காலத்தில் சுந்தர்.சி இயக்கும் மற்றொரு படத்தில் நடிப்பேன்'' என்றார்.
முதலில் இப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாகத்தான் கார்த்திகா நடிக்க பேசப்பட்டது. இப்போது அவரும் வெளியேறி விட்டதால் வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பார் என்று தெரிகிறது.


 

Post a Comment