டோணிக்காக மேலாடை துறந்த ரோஸ்லின்!

|

Rozlyn Khan Goes Topless Dhoni   
பூனம் பாண்டேவை இனி மறந்து விட வேண்டியதுதான்... காரணம், அவருக்குப் போட்டியாக ரோஸ்லின் கான் ஆடைகளை 'துறக்க' ஆரம்பித்து விட்டதால்...!

வாழ்க்கை ஒரு வட்டம்டா, ஜெயிக்கிறவன் தோப்பான், தோற்கிறவன் ஜெயிப்பான் என்று ஒரு படத்தில் விஜய் வசனம் பேசுவார். அது இப்போது பூனம் விஷயத்தில் உண்மையாகி வருகிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு வரை பூனம் பாண்டேதான் கவர்ச்சியின் உச்சாணியில் இருந்து வந்தார். இன்று அவரை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்து விட்டார் ரோஸ்லின்.

சமீப காலமாக பூனத்தை மிஞ்சும் வகையிலான செக்ஸி ஸ்டேட்மென்ட்களையும், போட்டோகிராப்களையும் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளார் ரோஸ்லின். இதனால் பூனம் பாண்டே மீது விழுந்து கிடந்த ரசிகர்களி்ன் கண்கள் ரோல்ஸின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், அதன் உரிமையாளரான ஷாருக் கானுக்கும் ஆதரவு தெரிவித்து முழு டிரஸ்ஸையும் கழற்றிப் போட்டு விடடு படுத்தபடி பலே போஸ் கொடுத்திருந்தார் பூனம். ஆனால் அதற்குப் போட்டியாக டோணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் ஆதரவு தெரிவித்து டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் ரோஸ்லின்.

ஐபிஎல் கோப்பையை சென்னை வென்றால் டோணி மற்றும் சென்னை வீரர்களுடன் இணைந்து டாப்லெஸ்ஸாக போஸ் கொடுப்பேன் என்று கூறியிருந்தார் ரோஸ்லின். ஆனால் சென்னை தோற்றுப் போய் விட்டது. இருப்பினும் சொன்ன சொல் மீறாமல் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டுள்ளார் ரோஸ்லின்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை அணியையும், டோணியையும் நான் நேசிக்கிறேன். அவர்கள்தான் சிறந்த வீரர்கள். கோப்பையை வெல்வார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் தோற்றது என்னை சிதறடித்து விட்டது.

இருப்பினும் அவர்கள் மீது நான் இன்னும் அன்பு வைத்துள்ளேன். அதில் மாற்றம் இல்லை. அடுத்த ஐபிஎல் போட்டியில் அவர்கள் கலக்குவார்கள். அதற்கு முன்பு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பிரமாதமாக ஆடுவார்கள்.

அவர்களது முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறிய அளவிலான எனது பங்களிப்பாக இந்த புகைப்படங்களை வெளியிடுகிறேன் என்று கூறி தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டுள்ளார் ரோஸ்லின்.

அடுத்து பூனம் என்ன பண்ணப் போகிறாரோ....!
Close
 
 

Post a Comment