விஜய் டிவியில் தமிழில் அமீர்கானின் 'சத்ய மேவ ஜெயதே'

|

Aamir Khan S Satyamev Jayate On Star Vijay Tv
ஸ்டார் ப்ளஸ், டிடி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சி விஜய் டிவியில் ஞாயிறுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்தி நடிகர் அமீர்கான் பங்கேற்று நடத்தும் ரியாலிட்டி ஷோ ‘சத்ய மேவ ஜெயதே’. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி யிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே பெண் சிசுக் கொலை, கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. பெண் கருக்கொலைக்கு எதிராகவே கருத்துக்களைப் பதிவு செய்தனர். டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது பற்றிய பேச்சாகவே இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான புரமோசன் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ஊர் ஊராக சென்று அங்குள்ள பிரச்சனைகளை அலசுகிறார் அமீர்கான். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அமீர்கான் ஒருவேளை தமிழில் பேசுவாரோ?!
Close
 
 

Post a Comment