கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு - ஹாங்காங் பயணமானார் ரஜினி!!

|

Rajini Fly Off Hong Kong Kochadaiyaan Shoot
கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க இன்று காலை விமானத்தில் புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கப்பட்டன. ஒரு டூயட் பாடலுக்கு ரஜினியும், தீபிகா படுகோனேவும் பரத நாட்டியம் கலந்த புதிய வகை நடனத்தை ஆடினர்.

இப்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு. இந்த முறை ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்தப் படப்பிடிப்புக்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். கதாநாயகி தீபிகா படுகோனேயும் ஹாங்காங் செல்கிறார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா படப்பிடிப்பை நடத்துகிறார்.
 

Post a Comment