இந்தோனேசியாவில் கலைஞர் டிவியின் “சூரிய புத்ரி'' குழு

|

Soorya Puthri Serial Outdoor Shooting In Indonesia
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூர்ய புத்ரி தொடர் இனி படப்பிற்காக வெளிநாட்டில் முகாமிட்டுள்ளனராம். ( இங்கே வெயில் ஓவரா இருக்கோ அதன் வெளிநாடு போயிட்டாங்க போலிருக்கு )

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ``சூரிய புத்ரி'' என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. இதுவும் கள்ளக்காதல் கண்றாவி கதைதான். இருந்தாலும் அதையே பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

வைஷ்ணவி மீடியோ ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் நடிகை குட்டிபத்மினி இந்த தொடரை தயாரித்துள்ளார். கிரியேட்டிவ் ஹெட் என்பதோடு `பாரதி' என்ற முக்கிய பாத்திரத்திலும் அவர் நடித்து வருகிறார்.

பாரதியின் ( குட்டிபத்மினி) கணவனான ராம், தான் காதலித்த பெண் ஸ்ரீமதியுடனும் திரை மறைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். ஒரு கட்டத்தில் ராமிடம் சமூக அங்கீகாரம் கேட்டு ஸ்ரீமதி நச்சரிக்க, ராம் அவளைக் கொன்று மலையிலிருந்து உருட்டி விடுகிறான். இதற்கிடையில், ராம்-பாரதி குடும்பத்தை அழிக்க முயற்சி எடுக்கும் கிருஷ்ணாவின் தொல்லை ஒருபுறம்... இவர்களின் இரண்டாவது மகன் ராஜேஷின் காதல் பிரச்சினை இன்னொரு புறம் என பிரச்சினைகளாக தொடர்கின்றன.

இவை ஓரளவிற்கு முடிவுக்கு வரவே பாரதி-ராம் இருவரும் மன நிம்மதிக்காக வெளிநாடு செல்கின்றனர். ஆனால் தான் கொலை செய்து விட்டதாக நினைக்கும் ஸ்ரீமதியை ராம் அங்கே பார்க்கிறான். அங்கு வேறு கெட்-அப்பில் வந்து மிரட்டும் ஸ்ரீமதியை பார்த்து ராம் குழம்புகிறான். இனிவரும் எபிஷோடுகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் வரும் காட்சிகளுக்காக படப்பிடிப்புக்குழுவினர் இந்தோனேஷியா போயிருக்கிறார்களாம். வெளிநாடு போயும் கள்ளக்காதல் கதைதான் எடுப்பேன் என்று வீம்பாக இருப்பவர்களை என்னவென்று சொல்வது?

Close
 
 

Post a Comment