கன்னட நடிகர் அம்பரீஷின் 60வது பிறந்தநாள் விழா பெங்களூரில் நடந்தது. இந்த விழாவில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தனது நீண்ட நாள் நண்பரை வாழ்த்தினார்.
கன்னட திரையுலகின் ரிபல் ஸ்டார் அம்பரீஷ் நேற்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவரது வீட்டில் நடந்த விழாவில் அவரது உறவினர்களும், நலம் விரும்பிகளும் கலந்து கொண்டனர். அவரது பிறந்தநாளையொட்டி பூஜைகளும்,ஹோமங்களும் நடத்தப்பட்டன. தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் பாபு, நடிகைகள் சரிதா, தாரா, கர்நாடக உள்துறை அமைச்சர் ஆர். அசோக் மற்றும் ஆதிசுன்சனகிரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிஜி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
கன்னட திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என ஏராளமானவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவிப்பதற்காக அம்பரீஷின் ரசிகர்கள் அவரது வீட்டு முன் குவிந்தனர். அவரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
பெங்களூர் ஜே.பி.நகர் துர்கா பரமேஸ்வர் மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த அவருடைய புகைப்பட கண்காட்சியை கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஜெயமாலா, ஜெயந்தி, தாரா உள்பட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
இது தவிர கர்நாடக திரைப்பட உலகம் சார்பில் நேற்றும் மாலை பெங்களூரில் உள்ள பேலஸ் கி்ரவுண்ட்ஸில் அம்பரீஷ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிரபல இயக்குனர் எஸ். நாயாரயண் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அம்பரீஷின் நண்பர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சத்ருகன் சின்ஹா, மோகன் பாபு, மம்மூட்டி உள்ளிட்ட பலர் திரையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.
ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அம்பரீஷ். தமிழில் ரஜினியுடன் ப்ரியா படத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் வீடியோவில் வாழ்த்து:
தமிழின் மற்றொரு சாதனை நடிகரான கமல்ஹாசன் தனது வாழ்த்துச் செய்தியை அம்பரீஷுக்கு வீடியோவாக அனுப்பி வைத்திருந்தார்.