தியாகராஜ பாகவதர், கவுண்டமணி, நான்: சந்தானத்தின் கனவு

|

Santhanam S Dream Role
ஆசையில்லா மனிதன் கிடையாது. ஆனால் நடிகர் சந்தானத்திற்கு ஒரு வித்தியாசமான ஆசை உள்ளது.

சந்தானம் தான் இன்றைய தேதியில் படுபிசியாக இருக்கும் காமெடி நடிகர். ஓ.கே. ஓ.கே. படத்திற்கு பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டு ரிலீஸான படங்களில் கிட்டதட்ட முக்கால் வாசி படங்களில் சந்தானம் தான் காமெடியன். அதுவும் இயக்குனர் ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் ஆகிவிட்டார். இவரை படத்தில் எடுத்தாலே அது ஹிட் என்று ராஜேஷ் நினைக்கிறார்.

இத்தனை படங்களில் நடித்துள்ள சந்தானத்திற்கு ஒரு கனவு கதாபாத்திரம் உள்ளதாம். அது குறித்து அவர் கூறுகையில்,

ஒரு படத்திலாவது நான் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவு, ஆசை. அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். 30களைச் சேர்ந்த தியாகராஜ பாகவதர் மாதிரி ஒரு ரோல், 80களில் கலக்கிய கவுண்டமணி மாதிரி ஒரு ரோல் மற்றும் தற்போதைய தலைமுறை பிரதிநிதியாக நான் நடிக்க வேண்டும் என்றார்.

உங்கள் ஆசை பற்றி அறிந்து கொள்ளும் ஏதாவது ஒரு இயக்குனர் உங்களின் கனவு கதாபாத்திரத்தை வழங்குவார் என்று நம்புங்கள்.
Close
 
 

Post a Comment