ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய 'உயிரெழுத்து' படத்தில் ஹீரோவாக நான் நடிக்கவில்லை என்று லாரன்ஸ் சொன்னார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 12 வருடங்களுக்கு முன், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 'உயிரெழுத்து' படத்தில் நடித்தேன். ஹீரோவின் நண்பனாக சில காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருந்தேன். சமீபத்தில் 'உயிரெழுத்து' படத்துக்கு செய்யப்பட்ட விளம்பரங்களில், என்னை பிரதானப்படுத்தி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். 'உயிரெழுத்து' விளம்பரங்களில் என்னை பிரதானப்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன். 'காஞ்சனா'வுக்கு பிறகு நான் நடிக்கும் 'முனி' 3ம் பாகம் படத்தின் ஷூட்டிங், ஜூனில் தொடங்குகிறது. இதற்கிடையே நான் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
Post a Comment