வருகிற வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா

|

Trisha Postpones Her Marriage Plans   
கன்னித்தீவு கதை மாதிரி ஆகிவிட்டது, த்ரிஷா கல்யாண செய்திகளும்... à®'ரு நாள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று வந்தால், அடுத்த நாள் புதுப்படத்தில் த்ரிஷா à®'ப்பந்தம் என செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது.

'இதான் கடைசி, அப்புறம் போயிடுவேன்.. வாய்ப்பு கிடைக்காது.. உங்க படத்துக்கு à®'ப்பந்தம் பண்ணிக்குங்க' என்று போக்குக் காட்டி வாய்ப்பு பெறும் டெக்னிக்கா இது என்றும் தெரியவில்லை!

போகட்டும்... தமிழில் இன்னும் இரு புதிய படங்களில் த்ரிஷா à®'ப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் செய்தி.

தெலுங்கில் மேலும் இரு படங்கள் அவர் கைவசம் வந்துள்ளனவாம். இவை போக, விஷாலுடன் சமரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிதேஜாவுடன் à®'ரு படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

கோடியைத் தாண்டி சம்பளம்... இன்றைய தேதிக்கு அவர் பிஸியோ பிஸி.

"சினிமாவில் வாய்ப்புகள் வரும்போதே பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இப்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எந்த நல்ல வாய்ப்பையும் மறுப்பதில்லை. காரணம் எனக்கும் நடிப்பு இன்னும் அலுக்கவே இல்லை. எனவே கல்யாணத்துக்கு இது சரியான நேரமாக எனக்குத் தெரியவில்லை.

எனக்காகப் பிறந்தவர் நிச்சயம் கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும்," என்கிறார்.

நல்ல ப்ளான்!
 

Post a Comment