அனுஷ்கா மீது புகார் கொடுக்கலாமா? இயக்குனர் சுராஜ் யோசனை

|

Anushka Upsets Suraj   
உயர்ந்த நடிகை அனுஷ்கா மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கலாமா என்று அலெக்ஸ் பாண்டியன் இயக்குனர் சுராஜ் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

நடிகை அனுஷ்கா கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் துவங்கியபோது இயக்குனர் சுராஜ் அனுஷ்கா புகழ் பாடி வந்தார். பார்ப்பவர்கள் எல்லாம் இவர் என்ன எப்ப பார்த்தாலும் அனுஷ்கா புராணம் பாடுகிறாரே என்று கூறினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நடிகர் சங்கத்தில் அனுஷ்கா மீது புகார் கொடுக்கலாமா என்று சுராஜ் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அவரின் இந்த மனமாற்றத்திற்கு முழுக்க, முழுக்க காரணம் அனுஷ்காவாம். அனுஷ்கா படத்திற்கு 3 ஷெட்யூலாகப் பிரித்து கால்ஷீட் கொடுத்தாராம். முதல் கட்டப் படப்பிடிப்பில் சமத்தாக வந்து நடித்தவர் அடுத்தடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுக்கிறாராம். விக்ரமுடன் தாண்டவம், செல்வராகவனின் இரணடாம் உலகம் மற்றும் 2 பெத்த தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் தருகிறாராம்.

இது தான் சுராஜ் கடுப்பானதற்கு காரணம். அவர் புகார் கொடுப்பாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Close
 
 

Post a Comment