தென்றல் வில்லிக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு… மீண்டும் நடிக்க வருகிறார்!

|

Chinnathirai Actress Srivithya Again Acting Tv Serial
தென்றல் தொடரில் திருமணமான நபரை காதலிக்கும் பெண்ணாகவும், முந்தானை முடிச்சு சீரியலில் கணவரின் பாசத்திற்கு ஏங்கும் பெண்ணாகவும் நடித்து அசத்திய ஸ்ரீ வித்யாவிற்கு டும் டும் டும் முடிஞ்சாச்சு. திருமணத்தை சாக்காக வைத்து தென்றலில் கோமாவிற்கு போய்விட்டார்.

முந்தானை முடிச்சு தொடரில் ஆளை மாற்றிவிட்டார்கள். கணவராக கிடைத்தவர் அவரது சொந்த அண்ணியி கசின் பிரதராம்.

மொரிசியஸ் தீவிற்கு ஜாலியாக ஹனிமூன் டிரிப் அடித்து விட்டு வந்திருக்கும் ஸ்ரீ வித்யா சொன்னது வேறென்று மில்லை விரைவில் மீண்டும் சின்னத்திரையில் நடிப்பேன் என்பதுதான். அப்போ தென்றலில் மீண்டும் மிரட்டல் சாருவை பார்க்கலாம்.
Close
 
 

Post a Comment