மங்கத்தா போன்று தாண்டவத்திலும் பேசப்படுவேன்: லக்ஷ்மி ராய்

|

Lakshmi Rai Leaves London Join Thaandavam Team    | தாண்டவம்  
நடிகை லக்ஷ்மி ராய் தாண்டவம் ஷூட்டிங்கில் பங்கேற்க நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன் நடிக்கும் படம் தாண்டவம். படத்தின் பெரும்பகுதி இங்கிலாந்தில் தான் படமாக்கப்படுகிறது. இதற்காக தாண்டவம் குழுவினர் இங்கிலாந்து முகாமிட்டுள்ளனர். அவர்களை சோதிக்கும் விதமாக அங்கு மழை பெய்து வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் அனுஷ்கா, ஏமி தவிர லக்ஷ்மி ராயும் உள்ளார். அடேங்கப்பா விக்ரமுக்கு 3 ஜோடியா என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால் லக்ஷ்மி ராய் என்ன சொல்கிறார் என்பதை படியுங்கள்,

தாண்டவம் படத்தில் நான் விக்ரமையோ, அவர் என்னையோ காதலிக்கவில்லை. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க நான் வருவேன்.

எப்படி மங்காத்தாவில் நான் வில்லியாக நடித்தாலும் எனது கதாபாத்திரம் பேசப்பட்டதோ அதேபோன்று இந்த படத்திலும் எனது நடிப்பு பேசப்படும் என்று நம்புகிறேன் என்றார்.

தாண்டவம் ஷூட்டிங்கிற்காக அவர் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
Close
 
 

Post a Comment