கவிஞர் தாமரையின் கணவர் எங்கே? பரபரக்கும் மீடியா உலகம்!

|

Cinima Lyricist Thamarai S Husband
சென்னை: சினிமா பாடலாசிரியர் தாமாரையின் கணவர் தியாகுவை கடந்த சில நாட்களாக காணவில்லை என்ற தகவல் தற்போது திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஈழப்பிரச்சினையில் தீவிர ஆர்வம் கொண்ட தோழராக அறியப்பட்ட தியாகு கடந்த 13-ம் தேதியில் இருந்து எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை.

கவிஞர் தாமரையும், தோழர் தியாகுவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள். இருவருக்குமே முதல் திருமண வாழ்க்கை சரியாக இல்லாத காரணத்தினால் இரண்டாவதாக தியாகுவும், தாமரையும் மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்தனர். தங்களுடைய காதலைப் பற்றி கவிஞர் தாமரை பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென தியாகு மாயமாகிவிட்டார். தியாகு யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் மாயமாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களிலும், திரைப்படத்துறை வட்டாரங்களிலும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் தியாகு. அவரை கடந்த 13 ம் தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து நிர்வாகிகள் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் கூறும் நிர்வாகிகள், தியாகு எந்த வேலையும் பார்க்காமல் தொலைக்காட்சிகளில் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதே.

அதேசமயம் கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தியாகு தலைமறைவாகிவிட்டார் என்றும் வதந்திகள் உலா வருகின்றன. ஆனால் கொல்லிமலையைச் சேர்ந்த பெண்ணுக்கும் தியாகுவுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தாமரைதான் தியாகுவை துன்புறுத்தினார் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். இதில் எது உண்மை என்பதை தியாகுவே நேரில் வந்து கூறினால்தான் உண்டு!
Close
 
 

Post a Comment